சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லடாக் மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் "அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கவும், அது மேலும் அதிகரிப்பதைத் தடுக்கவும் அரசாங்கத்தின் அனைத்து உறுப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடியை சிங் கேட்டுக்கொண்டார்.


வெள்ளிக்கிழமையன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மன்மோகன் சிங் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  


இது குறித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..... "கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேரின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்று துரோகம்.



தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டை காப்பதற்காக போராடியுள்ளனர். இந்த சூழலில் நமது அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. இதன்மூலமே வருங்கால சமுதாயத்தினர் நம்மை உணர்ந்து கொள்வர். ஜனநாயக நாட்டில் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய நிலையில் பிரதமர் இருக்கிறார். தேசத்தின் பாதுகாப்பைக் கருதி பிரதமர் பயன்படுத்தும் வார்த்தைகளையும், எடுக்கும் முடிவுகளையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.


READ | ராணுவ துருப்புகள் குவிப்பால் பதற்றமான சூழலில் இந்திய - சீனா எல்லை பகுதி!


கடந்த ஏப்ரல் 2020-ல் இருந்து பல்வேறு ஊடுருவல்களின் மூலம் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் சோ ஏரி உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா முறைகேடாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் கீழ்ப்படியக் கூடாது.


இந்த விஷயம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தாத வகையில் அரசின் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் பிரதமர் முடிவெடுக்க வேண்டும். இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நிற்க வேண்டும். வெளியில் இருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம் என்று குறிப்பிட்டுள்ளார்.