PM Narendra Modi 3.0: இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் எந்த ஒரு கட்சியும் தனி பெரும்பான்மை அடையவில்லை. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கான கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்று மீண்டும் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் கூட்டணி நிர்பந்தத்தின் காரணமாக மோடியின் அமைச்சரவையில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஒரு அமைச்சருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி!


பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 3வது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்த முறை மொத்தமாக 78 முதல் 81 அமைச்சர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான துறைகளான உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவை பாஜகவிடம் தொடர்ந்து இருக்கும் என்றும், சிவில் விமானப் போக்குவரத்து, நிலக்கரி, வேளாண் போன்ற துறைகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா இன்று மாலை 7.15 மணிக்கு தொடங்கி 45 நிமிடம் நடைபெற உள்ளது. 


கடந்த 2014 முதல் பாஜக இந்தியாவை ஆட்சி செய்து வருகிறது. இதுவரை 2 முறை ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ள பாஜக அரசு தனி பெரும்பான்மையாக இருந்தது. ஆனால் இந்த முறை அவர்களால் தனி பெரும்பான்மை அடையமுடியவில்லை. எனவே பாஜக பதவியேற்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் போன்றவற்றின் ஆதரவு தேவைப்பட்டது. இதனை புரிந்து கொண்டு கூட்டணி கட்சிகள் தங்களுக்கு வேண்டிய துறைகளை கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சில எம்பிக்களை கொண்டுள்ள கட்சிகளும் பாஜகவை முழிபிதுங்க வைத்துள்ள. எனவே, கடந்த முறை பொறுப்பில் இருந்த அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைப்பது சிரமம் என்றும், அப்படியே கிடைத்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. 


இன்று பதவியேற்பு விழாவில் என்டிஏ கூட்டணி கட்சிகள் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர் பதவிகளும், ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி ஏற்கப்போகும் இரண்டாவது நபர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இதற்கும் முன்பு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் வென்று பிரதமராக இருந்துள்ளார். இன்று மோடி பதவியேற்க உள்ளதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு நிலவி வருகிறது.


 மேலும் படிக்க | வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேர வயது வரம்பு என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ