ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி!

Piyush Goyal Reply To Allegations Of Rahul Gandhi: லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) மூலம் ஊழல் செய்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2024, 10:41 PM IST
  • லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டதால் பாஜக?
  • போலி கருத்து கணிப்பு மூலம் ஊழலா?
  • ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்
ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி! title=

போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட வைத்து அதன்மூலம் பங்குச்சந்தைகயில் தங்களுக்கு ஏற்றவாறு ஏற்றியும் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  இது குறித்த விவரங்களை முன்கூட்டியே சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் வெளியிட்டுள்ளதாகவும் இதன் மூலமாக ஊழலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என மிகப் பெரிய குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன் வைத்துள்ளார்.

பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) வெளியிட்டு ஊழல் செய்துள்ளதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில், ஜூன் 4-ஆம் தேதி இந்திய பங்குச்சந்தையில் சாமானிய மக்கள் 30 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

பங்குச்சந்தை வீழ்ந்த ஜூன் 4-ஆம் தேதியும் இந்திய முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தனர் என பியூஷ் கோயல் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் முன்னெழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு பியூஷ் கோயல் பதிலளித்து பேசினார்.

ஏப்ரல் மற்றும் மே மாதம் பங்குச்சந்தை உச்சத்தில் இருந்தபோது வெளிநாட்டினர் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்பனை செய்தனர். அதனை பயன்படுத்தி இந்திய முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கினர். இந்த இரண்டு மாதங்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட எழுச்சியால் இந்திய முதலீட்டாளர்கள் தான் பயன்பெற்றனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வந்த நாளில் வெளிநாட்டினர் இந்திய பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கினர். இந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபம் அடைந்தனர்.

மேலும் படிக்க | INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!

தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை சரிந்தபோது, ​​வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறைந்த விலைக்கு பங்குகளை விற்றதால், மோடி அரசு வருகிறது, சாதகமாகப் பயன்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் இந்திய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கினர்.

வெளிநாட்டினர் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு பங்குகளை விற்றனர். இந்திய முதலீட்டாளர்கள் அதிக விலைக்கு விற்று குறைந்த விலைக்கு வாங்கினார்கள். ஒரு வகையில், இந்திய முதலீட்டாளர்கள் இந்தக் நேரத்திலும் சம்பாதித்தனர். யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 'ரூ. 30 லட்சம் கோடி... பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல்... புட்டு புட்டு வைத்த ராகுல் காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News