ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு துவங்கும் போது, வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளில் இளைஞர்களை வாக்களிக்கும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. 


உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.


இத்தேர்தலில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, ராஜ்நாத்சிங், ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக சுமார் 94 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலில் சுமார் எட்டு கோடியே 75 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யயுள்ளனர்.



இந்நிலையில், பிரதமர் மோடி ட்விட்டர் மூலம்இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த பதிவில், "2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலில் ஐந்தாவது கட்டமாக வாக்களித்த அனைவருக்கும் பெருமளவில் வாக்களிக்க வேண்டும். நமது ஜனநாயகத்தை வளப்படுத்தவும் இந்தியாவின் சிறந்த எதிர்காலத்திற்கு பங்களிக்கவும் ஒரு வாக்கு மிகவும் பயனுள்ள வழியாகும். என் இளம் நண்பர்கள் பதிவு எண்ணிக்கையில் வாக்களிப்பதை நான் நம்புகிறேன்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.