மாநிலங்களவையின் 250 வது அமர்வில் NCP கட்சியை பாராட்டிய பிரதமர் மோடி
மாநிலங்களவையின் 250 வது அமர்வு இன்று தொடங்கியது. அப்பொழுது பிரதமர் மோடி என்சிபியை பாராட்டினார். இது மகாராஷ்டிராவின் சமீபத்திய அரசியலுடன் இணைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் (Maharashtra) அரசியலின் சாணக்கியராகவும், சிவசேனா மற்றும் காங்கிரசுடன் சேர்ந்து மாநிலத்தில் மாற்று கூட்டணி அமைப்பதில் சிற்பி என்று சரத் பவாரை அனைவரும் கூறி வரும் நிலையில், மறுபுறம் பிரதமர் மோடி மாநிலங்களவையில் (Rajya Sabha) தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் (Nationalist Congress Party) பாராட்டி உள்ளார். இந்த குளிர்கால அமர்வில் மாநிலங்களவையின் 250வது அமர்வு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) இரண்டு முறை என்.சி.பி. (தேசியவாத காங்கிரஸ் கட்சி) கட்சியை புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது பி.ஜே.டி (Biju Janata Dal) மற்றும் என்.சி.பி ஆகிய கட்சிகள் சபையில் ஒழுக்கத்தை பேணுகின்றன என்று அவர் கூறினார். இரு கட்சிகளும் மற்ற கட்சிகளை, குறைகூற வேண்டாம் என்று முடிவு செய்து, அதை செயல்படுத்தின. இதனால் இந்த இரு கட்சிகளின் அரசியல் வளர்ச்சி பயணத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பிரதமர் மோடி NCP கட்சியை பாராட்டு இருப்பது, மகாராஷ்டிராவின் சமீபத்திய அரசியலுடன் இணைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
மேல் சபையின் இரண்டு சிறப்பு விஷயங்கள் உள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்: 1) நிலைத்தன்மை 2) பன்முகத்தன்மை.
ஸ்திரத்தன்மை என்பது மக்களவை கலைக்கப்படுகிறது, ஆனால் மாநிலங்களவை ஒருபோதும் கலைக்கப்படாது. பன்முகத்தன்மை என்பது - மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அளிக்கும் ஒரு முன்னுரிமை எனக் கூறினார்.
ஒற்றுமையின் ஆதாரம் இந்தியாவின் பன்முகத்தன்மை ஆகும். அதுவே பன்முகத்தன்மையின் மிகப்பெரிய பலமாகும். அந்த பலம் தான் இரு அவைகளிலும் பிரதிபலிக்கிறது. எல்லோருக்கும் தேர்தல் களத்தை கடப்பது எளிதல்ல, ஆனால் அது அவர்களின் பயனைக் குறைக்காது. நாட்டின் கொள்கை வகுப்பதில் நன்மைகளைத் தருகிறது.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "இந்த சந்தர்ப்பத்தில் சேர எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு போற்றத்தக்கது. வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் பேசுவதில் பெருமையடைகிறேன். மாற்றங்களை ஏற்று அதனுடன் பயணிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை பிரதிபலிக்கிறது மாநிலங்களவை. டாக்டர் அம்பேத்கர் மாநிலங்களவை வாயிலாகத்தான் நாடாளுமன்றத்திற்கு அறிமுகம் ஆனார்’ என்று பிரதமர் பேசினார்.
நரேந்திர மோடி மேலும் பேசுகையில்; ‘தேர்தலில் பங்கேற்காதவர்களும் நாட்டின் வளர்சிக்கு உதவ மாநிலங்களவை வாய்ப்பளிக்கிறது. சிறந்த தலைவர்கள் பலர் மாநிலங்களவையில் உரையாற்றி இருக்கின்றனர். முத்தலாக் மசோதா இங்கு நிறைவேற்றப்படாது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால், அது நடந்தேறியது.
இதேபோல்தான் GST-யிலும் நடைபெற்றது. 370 சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் 35(A) தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது மாநிலங்களவையின் பங்கை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த சபை வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க உரைகளை தந்துள்ளது.
ராஜ்யசபாவின் சபாநாயகர் இருக்கை அருகே செல்லும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. இந்த கட்சியினரை பார்த்து பிற கட்சியினர் கற்று கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை துவங்கிய நிலையில், மாநிலங்களவையின் 250 ஆவது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அப்போது, இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு குறித்து பிரதமர் பேசுகையில்; ‘மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். மேலும், அவர்களை மனமார பாராட்டுகிறேன். மாநிலங்களவை பல வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை சந்தித்த பெருமைகளை கொண்டது.