திமுக நல்ல கட்சியா...? அட்டாக் செய்த பிரதமர் - எதிர்க்கட்சிகள் கூட்டம் தான் காரணமா?
PM Modi Attacks On Opposition Parties: குடும்ப அரசியல் செய்வோருக்கு அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம், நாடு இல்லை என எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி கடும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
PM Modi Attacks On Opposition Parties: எதிர்க்கட்சிகளின் கவனம் அனைத்தும் தங்களது குடும்பம் மீது தான் தேசம் குறித்து அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த நிக்கோபார் போர் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் விமான நிலைய முனையத்தில் புதிய முனையத்தை காணொலி மூலம் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில், "அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் இல்லை. ஊழல்தான் அவர்களின் உந்துதலாக உள்ளது. பெரிய ஊழல் செய்த நபர், அதிக ஊழல் செய்த நபர், மேசையில் அவர்களின் இருக்கையை உயர்த்தி வைக்கிறார்கள்," என்றார்.
ஜனநாயகத்தில், மக்களின், மக்களால் மற்றும் மக்களுக்கான அரசாக இருக்கும். ஆனால், குடும்ப அரசியல் கட்சிகளுக்கு அது குடும்பத்தின், குடும்பத்தால் மற்றும் குடும்பங்களான அரசாகும். அவர்களின் குடும்பம் தான் அவர்களுக்கு முதன்மையானது, தேசம் எதுவுமில்லை. இதுதான் இவர்களின் முழக்கம். வெறுப்பும், ஊழலும் தான் இருக்கிறது. குடும்ப அரசியலின் நெருப்புக்கு நாடு பலியாகியுள்ளது.
'கடுமையான ஊழல்வாதிகளின் கூட்டம்'
அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமே முக்கியம், நாட்டில் உள்ள ஏழைகளின் வளர்ச்சி அல்ல. நாட்டின் ஏழைகளின் குழந்தைகளின் வளர்ச்சியில் அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) அக்கறை இல்லை. அவர்களது குடும்பத்திற்கு ஊழலை அதிகரிப்பதே அவர்களின் பொதுவான குறைந்தபட்ச திட்டமாகும்.
மேலும் படிக்க | எல்லை தாண்டிய காதலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... பயங்கரவாத எதிர்ப்புப் படை விசாரணை!
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான வியூகத்தை வகுப்பதற்காக 26 எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கூட்டம் நடக்கும் சூழலில் பிரதமர் மோடி அவர் தாக்கி பேசியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை "கடுமையான ஊழல்வாதிகள் கூட்டம்" என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். zeenews.india.com/tamil/tamil-nadu/prime-minister-narendra-modi-contest-in-ramanathapuram-in-2024-elections-453952
'வாய்மூடி மௌனம்'
ஊழலை ஊக்குவிப்பதற்காக தான் இந்தக் கூட்டம் என்று மக்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் ஊழல் வழக்குகள் இருந்தும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் குற்றமற்றவர் பட்டத்தை கொடுத்துள்ளன. இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் வன்முறைகள் குறித்து வாய்மூடி மௌனமாக இருக்கின்றனர்.
சுமார் ரூ. 710 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடம், தீவின் இணைப்பை அதிகரிக்கும். சுமார் 40 ஆயிரம் 800 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட புதிய முனைய கட்டடம் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இயற்கையான சுற்றுப்புறங்களை சித்தரிக்கும் கட்டடம் ஷெல் போன்ற வடிவத்தில் உள்ளது.முழு முனையமும் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு 100 சதவீத இயற்கை விளக்குகளைக் கொண்டிருக்கும், இது கூரையில் ஸ்கைலைட்கள் மூலம் அடையப்படும்.
மேலும் படிக்க | பெங்களூருவில் 2-வது நாளாக இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ