புல்வாமா தாக்குதல் தொடர்பாக இன்று பிரதமர் மோடி அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியாகினர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. 


இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முதன் முதலாக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்ட அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு காங்., தனது முழு ஆதரவு தரும் என காங்., தலைவர் ராகுல் அறிவித்திருந்தார். எனவே இன்று நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பதன்கோட், உரி, நக்ரோட்டா தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக மத்திய அரசு கூட்ட உள்ள இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகளின் விவாதித்து ஒருமித்த ஆதரவை பெற மத்திய அரசு முடிவுசெய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக பயங்கரவாதிகளுக்கு எதிராக மீண்டும் ஒரு துல்லியத்தாக்குதல் நடத்தப்படலாம் என செய்திகள் பரவி வந்த நிலையில், இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.