புதுடெல்லி: எல்லையில் நாட்டை பாதுகாக்கும் பணியில் இருக்கும் இந்திய வீரர்களுடன் தீபாவளி கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ராஜஸ்தானின் ஜெய்சல்மேரை அடைந்தார். அவர் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய்சல்மேரில் (Jaisalmer) இன்று பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி.எஸ்) பிபின் ராவத், ராணுவத் தலைவர் எம்.எம். நார்வானே மற்றும் BSF டைரக்டர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோரும் பிரதமருடன் இருந்தனர்.


லோங்கேவாலாவில் வீரர்களுடன் உரையாற்றும் போது, ​​பிரதமர் மோடி (PM Modi) முதலில் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் நல்வாழ்த்துக்களைக் கொண்டு வந்துள்ளதாக வலியுறுத்தினார். நீங்கள் இருக்கும் வரை, இந்த நாட்டின் தீபாவளி கொண்டாட்டங்கள் முழு வீச்சில் பிரகாசமாக நடைபெறும் என்று ராணுவ வீரர்களிடம் பிரதமர் கூறினார்.



"நீங்கள் பனி மூடிய மலைகளிலும் பாலைவனங்களிலும் பணிபுரிந்து நாட்டை காக்கிறீர்கள். நான் உங்களுக்கு மத்தியில் வரும்போதுதான் எனது தீபாவளி நிறைவடைகிறது. உங்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இமயமலையின் சிகரங்களோ, பாலைவனத்தின் சுடும் மணலோ, அடர்ந்த காடுகளோ, அனைத்து இடங்களிலும் உங்கள் வீரம் எப்போதும் வெற்றி பெற்றது” என்று அவர் மேலும் கூறினார்.


ALSO READ: Diwali 2020: நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் மோடி


 லோங்கேவாலாவின் போர் நினைவுகூரப்படும்:


பிரதமர் மோடி, ஜெய்சால்மரில் பணியில் உள்ள வீரர்களின் வீரம் குறித்து பாராட்டிப் பேசினார். படையினரின் சிறப்பைப் பற்றிய வரலாறு எழுதப்பட்டு படிக்கப்படும் போதெல்லாம், லோங்கேவாலா போர் நினைவுகூரப்படும் என்றார்.


இந்தியாவின் பாதுகாப்புத் திறனில் கவனம் செலுத்திய பிரதமர் மோடி, நாடு தனது பாதுகாப்புத் திறனை அதிகரிக்க வேகமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். உள்நாட்டு ஆயுதத் தொழிற்சாலையில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையின் இந்த ஒரு முடிவு 130 கோடி இந்தியர்களை உள்ளூர் கோட்பாட்டிற்காக குரல் கொடுக்கத் தூண்டியது, என்றார்.


ஆயுதப்படைகளுக்கு மூன்று அம்சங்கள்: பிரதமர்


ஜெய்சல்மேரில் உள்ள BSF வீரர்களுடன் உரையாற்றிய பிரதமர், "நான் மூன்று அம்சங்களை ஆயுதப்படைகளுக்கு கூற விரும்புகிறேன். முதலாவது புதுப்பித்தல் மூலம் புத்தி கூர்மை தொடர வேண்டும்; இரண்டாவது யோகா பயிற்சி; மூன்றாவது அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது புதிய கண்ணோட்டங்களையும் உற்சாகத்தையும் வளர்க்க உதவும்"


"இன்று இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் தலைவர்களையும் அவர்களது இடத்திற்கே சென்று கொல்கிறது. இந்த நாடு பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யாது என்பதை உலகம் இப்போது புரிந்துகொள்கிறது. இந்தியாவின் இந்த நற்பெயர் மற்றும் அந்தஸ்து அனைத்துக்கும் உங்கள் வலிமை மற்றும் வீரம் காரணமாகும்" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.


உரையின் முடிவில், பிரதமர் மோடி மற்றும் பி.எஸ்.எஃப் ஜவான்கள் ஜெய்சால்மேரில் உள்ள லோங்கேவாலாவில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டனர்.


ALSO READ: தீபாவளியில் எல்லையை காத்து நிற்கும் வீரர்களுக்காக ஒரு தீபம் ஏற்றுங்கள்: பிரதமர் மோடி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR