விரக்தியில் இருக்கும் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்பவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளுகிறார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமர் மோடிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கடுமையான மோதல் பிரசாரம் நடைப்பெற்று வருகிறது. பிரச்சாரத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


சமீபத்தில் மம்தா பானர்ஜி பிரசாரத்திற்கு சென்ற போது அவருடைய கார் செல்லும் வழியில் சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அப்போது உடனடியாக காரிலிருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அவர்களை அருகே அழைத்தார். அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். இதுபோன்று பல்வேறு பிரச்சனைகள் இருதரப்பிலும் முன்வைக்கப்படுகிறது.


தேர்தல் நடைபெறும் போதும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது.


இந்நிலையில் விரக்தியிலிருக்கும் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் சொல்பவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றார் என  பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். 


ஜார்கிராமில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,  ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிப்பவர்களை மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். நான் இன்று இங்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்கிறேன், அவரால் என்னை சிறையில் தள்ள முடியுமா? என கேள்வி எழுப்பினார்.


மேலும் மம்தா பானர்ஜி தான் பிரதமர் ஆவதற்காக மகாகூட்டணியை நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது பிரதமர் கனவு ஏற்கனவே பொய்த்துவிட்டது. அவரால் மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகள் கூட வெல்ல முடியாது எனவும் விமர்சனம் செய்தார்.