அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி: பயணத்தின் 3 முக்கிய அம்சங்கள் இவைதான்
நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா செயலுத்தி மன்றமான குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
புதுடெல்லி: அரசியல் மற்றும் செயலுத்தி ரீதியான பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டார். நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா செயலுத்தி மன்றமான குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலும் அவர் உரையாற்றவுள்ளார்.
பிராந்திய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வதும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் (UNGA) பிரதமர் ஆற்றவுள்ள உரையும், குவாட் தலைவர்களுடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளும் பிரதமரின் இந்த பயணத்தின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஆதிரேலியா ஆகிய நடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் நட்புறவு இந்த பயணத்திற்குப் பிறகு பன்மடங்கு அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
"செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 25 வரையிலான எனது அமெரிக்க பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய செயலுத்தி கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்வேன். மேலும் பரஸ்பர பாத்யதை உள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வேன்" என்று பிரதமர் மோடி அமெரிக்கா (America) செல்வதற்கு முன் கூறினார்.
ALSO READ: Quad மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்க பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தனது உரை, கோவிட் -19, உலகளாவிய சவால்கள், பயங்கரவாதம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, "உலகளாவிய முக்கிய பிரச்சினைகளில் எங்கள் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் எனது முதன்மை கவனம் இருக்கும்” என்று கூறினார்.
"எனது அமெரிக்க பயணம், அமெரிக்காவுடனான விரிவான உலகளாவிய செயலுத்தி கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது செயலுத்தி கூட்டாளிகளான ஜப்பான் (Japan) மற்றும் ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை வலுப்படுத்தவும், முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும் வழிவகுக்கும்" என்று அமெரிக்காவுக்கு புறப்படும் முன்னர் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தனது வாஷிங்டன் பயணத்தில், பிரதமர் மோடி குவாட் உச்சிமாநாட்டின் போது உலகத் தலைவர்களுடன் பல இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
குவாட் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை நடக்கவுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனார். இந்த உச்சிமாநாட்டில், போருக்காக துடித்துக்கொண்டிருக்கும் சீனாவால், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உருவாக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
சமீபத்தில் ஜப்பான் பிரதமர் சுகா தான் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்தால், இது அவரது கடைசி குவாட் உச்சிமாநாடாக இருக்கக்கூடும்.
"அமெரிக்க அத்பர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோருடன் நான் நேரில் சென்று கலந்துகொள்ளும் முதல் குவாட் தலைவர்களின் உச்சிமாநாடு இது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எங்கள் பகிரப்பட்ட தொலைநோக்கின் அடிப்படையில் எதிர்கால ஈடுபாட்டிற்கான முன்னுரிமைகளை அடையாளம் காண இந்த உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்குகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.
ALSO READ:SCO Summit 2021: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் உதவ விரும்புகிறோம்: பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR