Quad மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்க பயணம்

நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quad) என்பது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆத்திரேலியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா மூலோபாய மன்றம் ஆகும்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 22, 2021, 11:40 AM IST
Quad மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்க பயணம்

இந்தியா அமெரிக்கா இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த, செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என வெள்ளை மாளிகை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு இரு தலைவர்களும் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார்கள். 

வாஷிங்டனில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ள 'குவாட்' (Quad) அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இந்த வாரம் அமெரிக்காவுக்கு செல்கிறார். நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue - Quad) என்பது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆத்திரேலியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா மூலோபாய மன்றம் ஆகும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன.

ALSO READ | SCO Summit 2021: ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இன்னும் உதவ விரும்புகிறோம்: பிரதமர் மோடி

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் ஜோ பைடனை தவிர, துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரையும் சந்தித்து பேசுவார். 

இந்த சந்திப்பின் போது, நான்கு தலைவர்களும், முன்னதாக இந்த ஆண்டு மார்ச் 12 ஆம்  நடந்த மெய்நிகர் உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வார்கள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிப்பார்கள் என்றும் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் புதுதில்லியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கோவிட் -19 தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இது ஆகும். இதற்கு முன்னதாக, மார்ச் மாதத்தில், பங்களாதேஷ் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழா  மற்றும் அந்த நாட்டின் விடுதலைப் போரின் 50 ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  பிரதமர் மோடி வங்கதேசம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பாதுகாப்பு துறையில் ஏற்றுமதியாளராக உருவாகி வரும் இந்தியா: பிரதமர் மோடி புகழாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News