நாட்டின் பொருளாதாரம் குறித்து பேச மோடி-க்கு தைரியம் இல்லை -ராகுல்!
நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் ஏன் ஒரு பேரழிவிற்கான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது ன்பது குறித்து பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களிடம் பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தைரியம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் பிரதமருக்கு "தைரியம் இல்லை" என்று வலியுறுத்தினார்.
மேலும் போராட்டங்களால் மக்களின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் தேசத்திற்கு மிகப்பெரிய அவமதிப்பு செய்து வருகிறார் மோடி எனவும் அவர் விமர்சித்துள்ளார். 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட எதிர்க்கட்சி கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் தெரிவிக்கையில்., "நரேந்திர மோடிக்கு இந்த பல்கலைக்கழகங்களின் இளைஞர்களிடம் பொருளாதாரம் ஏன் ஒரு பேரழிவாக மாறியது, 50 ஆண்டுகளில் இந்தியாவில் வேலையின்மை மிக உயர்ந்த நிலையில் இருப்பது ஏன்? என்பது குறித்து பேச தைரியம் இருக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் பிரதமருக்கு இதைச் செய்ய தைரியம் இல்லை" என்று காந்தி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மாணவர்களை எதிர்கொள்ளும் தைரியம் மோடிக்கு இல்லை, எனவே அவர் காவல்துறையைப் பயன்படுத்தி அவர்களை நசுக்கினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
"எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் செல்ல பிரதமருக்கு நான் சவால் விடுகிறேன், அவரது காவல்துறை பலம் இல்லாமல், அவரது உள்கட்டமைப்பு இல்லாமல் அங்கே நின்று, இந்த நாட்டோடு அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை மக்களுக்குச் சொல்லட்டும்" என்று காங்கிரஸ் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
NCP தலைவரான சரத் பவார், இடது தலைவர்களான சீதாராம் யெச்சுரி, டி ராஜா மற்றும் JMM தலைவரும் ஜார்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், LJD தலைவர் சரத் யாதவ், ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, RJD தலைவர் மனோஜ் ஜா, தேசிய மாநாட்டுத் தலைவர் ஹஸ்னைன் மசூதி ஆகியோரைத் தவிர இந்தக் கூட்டத்தில் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எனினும் பகுஜன் சமாஜ் கட்சி (BSP), திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆகியவை எதிர்க்கட்சி கூட்டத்தில் இருந்து விலகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.