Economy Boost: பொருளாதாரத்தை உயர்த்துவது குறித்து பிரதமர் முக்கிய ஆலோசனை
மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், இதன் காரணமாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
புது டெல்லி: கொரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அடுத்து, மத்திய அரசாங்கத்தின் கவனம் இப்போது பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் செலுத்துகிறது. மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், இதன் காரணமாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகளின் தேக்கநிலை காரணமாக வளர்ச்சியின் பாதை ஸ்தம்பித்து வருவதாக தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்கும் உள்நாட்டு முதலீட்டை விரைவு படுத்துவதற்கும் ஒரு முக்கியமான கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் பொருட்டு இந்தியாவில் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிப்பதற்கும், உள்ளூர் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஒரு "விரிவான" கூட்டத்தை நடத்தினார்.
நாட்டில் தற்போதுள்ள தொழில்துறை நிலங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் அல்லது தோட்டங்களில் மேலும் "பிளக் அண்ட் ப்ளே" [Plug and Play] உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் தேவையான நிதி உதவியை வழங்குவதற்கும் ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
கூட்டத்தின் போது, முதலீட்டாளர்களை "கையாளுதல்", அவர்களின் பிரச்சினைகளை ஆராய்வது மற்றும் தேவையான அனைத்து மத்திய மற்றும் மாநில அனுமதிகளை காலவரையறைகளில் பெற உதவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பிரதம்ர் மோடி அறிவுறுத்தினார்.
இந்தியாவில் முதலீடுகளை சரியான பாதையில் கொண்டு வருவதற்கும், இந்திய உள்நாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கும் பல்வேறு உத்திகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.