PM மோடி - பைடன் போனில் உரை, Coronaக்கு எதிரான போராட்டத்தில் US உதவ ரெடி!
கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் முழுமையாக தயாராக உள்ளன.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் முழுமையாக தயாராக உள்ளன. இதுதொடர்பாக, திங்கள்கிழமை இரவு, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் (Joe Biden) தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளார். இந்த உரையில் இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரேனா பரவலின் (Coronavirus) இரண்டாம் அலை நாட்டையே அச்சுறுத்தி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் (Narendra Modi) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு சூழல் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு தேவையான உதவிகளை அமெரிக்க (US) செய்ய தயார் என உரையாடியுள்ளனர்.
இது தொடர்பாக ஜோ பிடன் தனது ட்வீட்டில், 'கொரோனா தொற்றுநோயின் ஆரம்பத்தில், எங்கள் மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகமாக இருந்தபோது, இந்தியா அமெரிக்காவிற்கு உதவியது. அதேபோல், இந்தியாவுக்கு இப்போது எங்கள் உதவி தேவை, நாங்கள் உதவ உறுதியாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கோவிட் நெருக்கடி குறித்து ஒருவருக்கொருவர் பேசினர். அதன்பிறகு, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிஷீல்ட் தடுப்பூசிக்குத் தேவையான மூலப்பொருட்களின் ஆதாரங்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது, இது உடனடியாக இந்தியாவுக்குக் கிடைக்கும்."
ALSO READ | தடுப்பூசி செலுத்திக்கப் போறீங்களா? இதையெல்லாம் மறக்காதீங்க: டாக்டரின் வைரல் வீடியோ
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, Covishield தடுப்பூசிக்குத் தேவையான Raw Material தாமதமின்றி இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா உறுதியளித்தது. கொரோனாவுடனான போரில் இந்தியாவின் உதவி குறித்து அமெரிக்கா முழு நம்பிக்கையை அளித்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வெள்ளை மாளிகையின் (White House) சார்பாக, "கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான PPE கருவிகள் மற்றும் பிற உபகரணங்கள் மற்றும் கருவிகளை உடனடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR