நம்ம சென்னையில் வந்தே பாரத் ரயில்... சில முக்கிய தகவல்கள்!
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் ரயில்: பயணிகளின் நீண்ட நேர பயணத்தை எளிதாக்குவதற்காக முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் இந்த ரயில் சேவையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கிய தகவல்கள்:
1. இந்தியாவின் அதிவேக வந்தே பாரத் (VB) ரயில்கள், மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது, வெள்ளிக்கிழமை அதன் தொடக்க ஓட்டத்தின் போது சென்னைக்கு செல்லும் 40 க்கும் மேற்பட்ட நிலையங்களில் நிறுத்தப்படலாம்.
2. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயிலின் முதல் ரயில், பெங்களூரில் இருந்து காலை 11 மணிக்குப் புறப்பட்டு கண்டோன்மென்ட், பைப்பனஹள்ளி, கேஆர் புரம், ஒயிட்ஃபீல்ட், தேவன்கொந்தி, மாலூர், தியாகல், பங்காரப்பேட்டை, வரதாப்பூர், பிசாநத்தம் போன்ற ஸ்டேஷன்களில் நின்று மாலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை அடைகிறது.
3. வழக்கமான VB சேவைகள் சனிக்கிழமை தொடங்கும். இந்த ரயில் வாரத்தில் ஆறு நாட்கள் (புதன் கிழமை தவிர) மைசூரு மற்றும் சென்னை இடையே காட்பாடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் மட்டும் நிறுத்தப்படும். VB ரயில் (20607) சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5. 50 மணிக்குப் புறப்பட்டு, 10. 20 மணிக்கு பெங்களூருவை அடைந்து, மதியம் 12. 20 மணிக்கு மைசூருவை வந்தடையும் (மொத்தப் பயண நேரம்: 6. 30 மணி நேரம்). மைசூரிலிருந்து புறப்படும் ரயிலான, 20608 VB எக்ஸ்பிரஸ் மைசூருவில் இருந்து மதியம் 1. 05 மணிக்கு புறப்பட்டு, KSR பெங்களூரு நகரை மதியம் 2. 55 மணிக்கும், சென்னையை இரவு 7. 30 மணிக்கும் சென்றடையும் (மொத்த பயண நேரம்: 6:35 மணி நேரம்).
4. ரயிலில் வேகத்தை குறைப்பதற்கும், அதிகரிப்பதற்கும் சிறந்த வகையிலான பிரேக்கிங் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
5. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்ற வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து பயணிகளுக்கும் சாய்வு இருக்கை வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
முதல் வந்தே பாரத் புது தில்லி-வாரணாசி இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், இரண்டாவது ரயில் புது தில்லி-ஸ்ரீ வைஷ்ணோ தேவி மாதா கோயில் உள்ள கத்ரா இடையே இயக்கப்படுகிறது. மூன்றாவது ரயில் குஜராத் காந்திநகர் முதல் மும்பை வரையிலும், நான்காவது புது தில்லியில் இருந்து ஹிமாச்சலின் அம்ப் அண்டௌரா ஸ்டேஷன் வரையிலும் செல்லும் ரயில் ஆகும்.
மேலும் படிக்க | அசுர வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள்; செப் 30 முதல் ‘இந்த’ வழித்தடத்தில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ