மெஜந்தா மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!
நொய்டா - கல்காஜி மந்திர் வரை செல்லும் புதிய மெஜந்தா மெட்ரோ ரயில்வே சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நொய்டா - கல்காஜி மந்திர் வரை செல்லும் புதிய மெஜந்தா மெட்ரோ ரயில்வே சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் கடந்த 2002-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை 12.64-km தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில், இன்று பிரதமர் மோடி, இந்த பாதையில் ரயில் பாதையை தொடங்கி வைத்தார். நொய்டா - கல்காஜி மந்திர் வரை செல்லும் இந்த புதிய மெட்ரோ ரயில்வே சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மெட்ரோ ரயில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.