டெல்லி அசோகா சாலையில் பாஜக தலைமையகம் அமைந்துள்ளது. தற்போதைய தலைமையகத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, தீனதயாள் உபாத்யாய் மார்க் சாலையில், பாஜக புதிய தலைமையகம் அமைக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த, 2016-ல், புதிய தலைமையகத்துக்கான அடிக்கல்லை, பிரதமர் மோடி நாட்டினார். இந்த கட்டடத்தை, இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இவ்விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி:- பலமிக்க தலைவர்கள் தான் பாஜக-வை முன்னெடுத்து சென்றனர். கொள்கையை முன்னெடுத்து செல்லும் திறமை பாஜகவுக்கு உண்டு. இந்தியாவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது எளிது. ஜனநாயக கூட்டணிக்கு நாம் தலைமை தாங்கி வருகிறோம். பாஜக தொண்டர்கள் கட்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தனர். 


இந்த கட்டடம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். சேவை செய்ய மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். நாட்டிற்காக மரணமடையவும் பாஜக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.