சர்வதேச யோகா தினம் இன்று: டேராடூன் மக்களுடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி!!
சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!
சர்வதேச யோகா தினமானது, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படும் என்று ஐ.நா. பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. எனவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்,,,! அதில், யோகா பயிற்சி உடலை சரியான முறையில் வைத்திருப்பதற்கான பயிற்சி மட்டுமல்ல; நம் உடல் நலம் சீராக இருப்பதற்கும் உதவும் என்று குறிபிடுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடி தற்போது டேராடூன் மக்களுடன் யோகா பயிற்சி குறித்து கலந்துரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 6,000 பேர் பங்கேற்றுள்ளனர். அப்போது அவர், உலகளவில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்தியாவில் தான் என்று கூறியுள்ளார்.