ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை சந்திக்க புறப்பட்டார் பிரதமர் மோடி
இன்று டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி அவர்கள் ரஷ்யா செல்லுவதற்காக விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
புதுடெல்லி: நாளை பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை சந்திக்க இருக்கிறார். அதற்காக இன்று டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி 36 மணி நேர விமான பயணத்திற்கு பிறகு ரஷ்ய நகரமான விளாடிவோஸ்டோக்கிற்கு சென்றடைவார். அங்கு நடக்கும் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து இந்தியா- ரஷியா இடையேயான 20வது ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த சந்திப்பில் இரு நாட்டு உயரதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான 12 ஒப்பந்தங்கள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.