கூட்டம் நிறைவடைந்த நிலையில் மீனவர்கள் மற்றும் விவசாய பிரதிநதிகளை பிரதமர் சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



ஒகி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. 



ஒகி புயல் பாதிப்புக்கு ரூ. 4,047 கோடி நிவாரண நிதி தேவை என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


 



 



ஒகி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம்  நடைபெற்று வருகிறது.



குமரி மாவட்டத்தில் ஓகி புயல் குறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி விளக்குகிறார்.



கவர்னர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்பு. 



ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்துள்ளார்.



 கவர்னர், பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.



ஒகி புயல் கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் குறிப்பாக மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் ஏராளமனவோர் மீனவர்கள் உயிரிழந்தனர்.


தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் பலர் இப்புயலால் மாயமாகினர். ஓகி புயலின் கோரத் தாண்டவத்தில் கேரளாவைச் சேர்ந்த 186 மீனவர்களும், தமிழகத்தை சேர்ந்த 433 மீனவர்களும் காணவில்லை எனவும்  மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு மற்றும் கேரளா அரசு நிவாரணம் நிதி அறிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீரமைப்பு பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
அதை தொடர்ந்து லட்சத்தீவு மற்றும் கேரளாவை பார்வையிட்ட  பிரதமர் மோடி தற்போது கன்னியாகுமரி வந்துள்ளார்.


அவர் லட்சத்தீவில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் போது பிரதமர் மோடியை சந்தித்த இலட்சத்தீவு பள்ளி மாணவர்கள், குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சட்ட சபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.


அதனை தொடர்ந்து தபோது, பிரதமர் மோடி கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு கொண்டிருக்கிறார்.