சீன எல்லை பிரச்சனைக்கு பின் முதல் முறையாக ராம் நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி...!!!
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு ராம் நாத் கோவிந்த் உடன் தேசிய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்தார்
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு ராம் நாத் கோவிந்த் உடன் தேசிய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்தார். சீன எல்லை பிரச்சனைக்கு பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்தும் பெறுகிறது.
இந்தியாவுக்கும் (India) சீனாவுக்கும் (China) இடையிலான எல்லை பதற்றம் அதிகரித்த பின் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
பிரதமர் நரேந்திர மோடி ( PM Marendra Modi) ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்ததாக, குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | கோவிடா, கோவினா, க்வாரண்டினா - மணிபூரில் பிறந்த கொரோனா கால குழந்தைகள்
பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் (President Ram Nath Kovind) சந்திப்பு குறித்து என்று ராஷ்டிரபதி பவனின் ராஷ்டிரபதி பவனின் அதிகாரபூர்வ ட்விட்டரில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan valley) இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த வன்முறை மோதலுக்குப் பின்னர் பிரதமர் மோடி லே (Leh) பகுதிக்கு சென்று லடாக்கிலுள்ள (Ladakh) நிமுவில் (Nimu) படையினரிடையே உரையாற்றிய சில நாட்களில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை வெடித்தபின் பிரதமருக்கும் குடியரசு தலைவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan valley)கடந்த ஜூன் 15 ம் தேதி இரு நாடுகளின் துருப்புகளுக்கு இடையில் நடந்த வன்முறை மோதல்களில், கர்னல் பி. சந்தோஷ் பாபு உட்பட 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீன தரப்பிலும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ALSO READ | தில்லியில், தெரு நாய்களைக் காப்பாற்ற சென்றவர்கள் தாக்கப்பட்ட பரிதாபம்!!
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் "நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தங்கள் உயிர்களை தியாகம் செய்து முன்மாதிரியாக திகழும் வீரர்களது தைரியத்தையும் உயர்ந்த தியாகத்தையும்" பாராட்டினார்.