பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஒருவருக்கொருவர் பாராட்டுக்கொண்டார்கள்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீஹாரில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்காக முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் மோடி பாராட்டினார்.பாட்னாவில் சீக்கிய மத குரு கோவிந்த் சிங் பிறந்த நாளை கொண்டாட்டத்தை முன்னிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 


அப்பொழுது அவர் பேசியதாவது:-


மதுவிலிருந்து எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்க நிதிஷ் குமார் எடுத்த நடவடிக்கைக்காக அவரை நான் பாராட்டுகிறேன். சமூக மாற்றத்திற்கு மதுவிலக்கு மிகப்பெரிய முடிவாகும். சமூக முடிவிற்கு ஒரு திட்டத்தை முன்னெடுத்து செல்வது என்பது கடினமான முடிவாகும். ஆனால், இதனை நிதிஷ் செய்துள்ளார். இது நிதிஷ்குமார் அல்லது அரசியல் கட்சியினரின் பணியாக மட்டும் இருக்கக்கூடாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இதனை அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த திட்டம் இங்கு வெற்றி பெற்றால், நாடு முழுவதிற்கும் முன்மாதிரியாக இருக்கும். இந்த விழாவை நிதிஷ் முன்னின்று ஏற்பாடு செய்ததாக எனக்கு தெரிவித்தனர். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார். 


பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதாவது:-


நரேந்திர மோடி குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் இருந்த போது, மதுவிலக்கை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தார் எனக்கூறினார். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை வரவேற்க்குரியது என பிரதமர் மோடியை பாராட்டினார் முதல்வர் நிதிஷ்குமார்.