உலகம் ஒரே குடும்பம் என்னும் இந்திய தத்துவத்தை கொரோனா உணர்த்தியது : பிரதமர் மோடி
இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. வசுதைவ குடும்பகம் என்னும் தத்துவத்தின் அடிப்படை உண்மையை, இந்த கொரோனா பலருக்கு உணர்த்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி: இந்தியா திங்களன்று (ஜூலை 5, 2021) பல்வேறு நாடுகளின் சுகாதார மற்றும் தொழில்நுட்ப களங்களின் பிரதிநிதிகளின் மெய்நிகர் உலகளாவிய மாநாட்டில், கோவிட் -19 தடுப்பூசி தளமான கோ-வின் விவரங்களை பகிர்ந்து கொண்டது.
அந்த நிகழ்வில் பிரதம மந்திரி நரேந்திர மோடி (PM Narendra Modi) உரையாற்றினார். இந்திய நாகரிகம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறது. வசுதைவ குடும்பகம் என்னும் தத்துவத்தின் அடிப்படை உண்மையை, இந்த கொரோனா பலருக்கு உணர்த்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். அதனால் தான், கோவிட் தடுப்பூசிக்கான இந்தியாவின் தொழில்நுட்ப தளம் - கோவின் CoWIN பல நாடுகள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
COVID19 க்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மென்பொருள் என்பது வளங்களுக்கான பற்றாக்குறை அல்லது இடையூறு இல்லாத ஒரு துறை. அதனால்தான் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான வகையில், இந்தியாவில் கோவிட் டிரேசிங் & டிராக்கிங் ஆப் (Covid tracing & tracking App) ஓப்பன் சோர்ஸாக ஆக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ALSO READ | COVID-19: ரஷ்யாவில் தீயாய் பரவும் கொரோனா; தடுப்பூசி தயக்கம் தான் காரணமா?
தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக , முற்றிலும் ஒழிக்க மனிதகுலத்திற்கு தடுப்பூசி ஒன்றே சிறந்த நம்பிக்கை தரும் விஷயமாக உள்ளது. அதனால் தான் தொடக்கத்தில் இருந்தே, எங்கள் தடுப்பூசி மூலோபாயத்தைத் திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியாவில் முடிவு செய்தோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதம மந்திரி நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான அரசு, நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிர்வகிப்பதற்கான தளத்தை பயன்படுத்த விரும்பும் நாட்டிற்கு கோ-வின் தளத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தளமான Co-Win செயலி உலகளவில் பகிர்ந்து கொள்ளப்படும்.
இந்த மெய்நிகர் மாநாட்டில், கனடா, மெக்ஸிகோ, நைஜீரியா, பனாமா மற்றும் உகாண்டா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் கோவின் தளத்தை பகிர்ந்து கொள்ள உள்ளன.
Also Read | ICMR: டெல்டா வைரஸில் இருந்து யாருக்கு அதிக பாதுகாப்பு உண்டு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR