சகோதரி(மம்தா) என் பெயரில் எஃப்.ஐ.ஆர்பதிவு செய்வார்: பிரதமர் கிண்டல்
மேற்கு வங்கத்தில் கூச் பிஹார் பகுதியில் நடந்த பிரதமர் மோடியின் தேர்தல் பேரணியில் கூட்டம் கூட்டமாக கூடிய மக்கள்.
2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றியை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தேர்தல் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அங்கு அவரின் பேச்சைக்கேட்கவும், அவரை பார்க்கவும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தனர்கள்.
அப்பொழுது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது,
மக்களை பார்த்து, உங்களிடம் ஒரு வேண்டுகோள், "நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள். இந்த மைதானம் முழுவதும் நிறைந்து விட்டது. நான் உங்களை பார்க்க முடியவில்லை. நீங்கள் என்னை பார்க்க முடியவில்லை. தயவுசெய்து அனைவரும் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே அமருங்கள் எனக் கூறினார்.
மேலும் அவர், "நான் மீண்டும் வருவேன் என்று உறுதியாக கூறுகிறேன், இந்த தேர்தலில் மட்டுமில்லை, வருடா வருடம் நான் இங்கு வருவேன். உங்களுக்கு காட்சி அளிப்பேன். உங்களிடம் பேசுவேன். அதனால் தயவுசெய்து, தற்போது எங்கே இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள் முன்னேறுவதற்கு முயற்சி செய்ய வேண்டாம்.' எனக்கூறினார்.
அந்த மைதானம் முழுவதும் மோடி...மோடி... என கோசங்கள் எழுப்பட்டது. அப்பொழுது ஒருவர் மைதானத்தின் எல்லையில் இருந்த சுவற்றின் மீது ஏறி நின்றுகொண்டு இருந்தார். இதைப்பார்த்த பிரதமர் மோடி, "சகோதரனே, நீங்கள் உடனடியாக கீழே இறங்குங்கள். தவறி கீழே எங்காவது விழுந்தால், சகோதரி(மம்தா பானர்ஜி) என் பெயரில் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வார். உங்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால், எனக்கும் இழப்பு ஏற்ப்படும் என்று கூறினார்.