இன்று (ஆகஸ்ட் 5) இந்தியாவுக்கு ஒரு வரலாற்று நாள் என்பதால் அயோத்தியின் ராமர் ஜன்மபூமியில் உள்ள ராம் கோயிலின் பூமி பூஜை பிரதமர் நரேந்திர மோடியால் செய்யப்படும். பூமி பூஜைக்காக பிரமாண்ட கொண்டாட்டங்கள் காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன, பிரதமர் மோடி மதியம் 12:40 மணிக்கு புனித நேரத்தில் பூமி பூஜை செய்வார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழா துவங்கியவுடன் மக்கள் அதை நேரலையில் பார்க்க அனுமதிக்கும் பொருட்டு அயோத்தி புனித நகரம் முழுவதும் பிரமாண்டமான CCTV திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு ஜெட் விமானத்தில் பிரதமர் மோடி புதுடெல்லியில் இருந்து லக்னோவுக்கு காலை 9.30 மணிக்கு வரவுள்ளார். அயோத்தி\யில் இறங்கிய பின்னர் பிரதமர் மோடி ஹனுமன்கரி கோயிலில் பிரார்த்தனை செய்து பூஜை செய்வார்.


 


ALSO READ | அயோத்தி விவகாரத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு..!!!


பிரதமர் மோடியைத் தவிர, பூமி பூஜை விழாவில் ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீரத் க்ஷேத்ரா அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால் தாஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத், உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


ராமர் கோயில் இயக்கத்தின் பல முக்கிய முகங்களான லால் கிருஷ்ணா அத்வானி, முர்லி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் மற்றும் உமா பாரதி ஆகியோர் கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் விழாவைத் தவிர்ப்பார்கள். வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்கள் கொண்டாட்டங்களில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 


ALSO READ | ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட முகூர்த்த நேரம் 32 வினாடி...!!!


பூமி பூஜை நடத்தும் 8 பிரோகிதர்கள் ஸ்ரீ ராமர் ஜனம்பூமி வளாகத்தை அடைகிறார்கள். ராமர் கோயிலின் பூமி பூஜை மதியம் 12.40 மணிக்கு நடைபெறும், பிரமாண்ட விழா சுமார் 2 மணி நேரம் நீடிக்கும்.