Video: ‘ஒரு அழகிய மழை நாளில் மதேரா சூரிய கோயில்’: வீடியோவைப் பகிர்ந்தார் பிரதமர் மோடி!!

குஜராத்தின் மொதேராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26, 2020) பகிர்ந்து கொண்டார்.
புதுடெல்லி: குஜராத்தின் மொதேராவில் (Modhera) அமைந்துள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் (Sun Temple) வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26, 2020) பகிர்ந்து கொண்டார். மேலும், மழை நாளில் இந்த கோயிலைக் காண்பது ஒரு அற்புதக் காட்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வீடியோவைப் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அகௌண்டில் பகிர்ந்தார்.
"மொதேராவின் சின்னமான சூரிய ஆலயம் மழை நாளில் மிகவும் அற்புதமாக தோன்றுகிறது" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
பிரதமர் வெளியிட்ட 55 வினாடிகள் கொண்ட வீடியோவில், கோயிலின் படிகளில் மழை நீர் ஓடுவதைக் காண முடிகிறது.
குஜராத் சுற்றுலா துறையின் (Gujarat Tourism) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மோதேராவின் சூரிய கோயில் புஷ்பவதி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சோலங்கி ஆட்சியாளர்களின் மரபையும் புகழையும் கட்டிடக் கலையையும் எடுத்துக்காட்டும் சின்னமாக உள்ளது.