அகமதாபாத் - மும்பை இடையே 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே துவக்கி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைப்பெற்றது..


ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. 


இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, நேற்று விமானம் மூலம் ஆமதாபாத் வந்தடைந்தார். அவரை  பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார்.


இதையடுத்து இருவரும் திறந்த வாகனத்தில் பொதுமக்களை வணக்கம் தெரிவித்துக் கொண்டே புறப்பட்டு சென்றனர். பின்னர் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர்.


இந்த சூழலில் இந்திய-ஜப்பான் இடையேயான 12-வது உச்சி மாநாடு காந்தி நகரில் இன்று நடைபெறுகிறது. அதில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


இதனைத் தொடர்ந்து ஆமதாபாத்தில் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதனை பிரதமர் மோடியும், ஷின்ஷோ அபேயும் தொடங்கி வைத்தார்.


ரூ 1.1௦ லட்சம் கோடி மதிப்பில், 508 கி.மீ தொலைவிற்கு புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த திட்டம் வரும் 2022-ம் ஆண்டு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.