PM Modi: ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மோடி... அடுத்து பதவியேற்பு எப்போது?
PM Modi Resignation: 17ஆவது மக்களவை அமைச்சரவையை கலைக்கும் பரிந்துரையையும், தனது ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி அளித்த நிலையில், அவற்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.
President Droupadi Murmu Accepted PM Modi Resignation: 18ஆவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளையும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும், மற்றவை 17 தொகுதிகளையும் கைப்பற்றின. இதில் அதிகபட்சமாக பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றினாலும், கடந்த இரண்டு தேர்தல்களை போன்ற தனி பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை எனலாம்.
இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரலாம் என்பதால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக விரைவில் பதவியேற்பார் என தெரிகிறது. குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கியம் ஜனதா தளம் ஆகியவை தங்களது ஆதரவு பாஜகவுக்குதான் என்பது உறுதியாக தெரிவித்துவிட்டன.
ஒரு விமானத்தில் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார்
சந்திரபாபு நாயுடு இன்று டெல்லிக்கு புறப்படும் முன்னர், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பதாக தெரிவித்துவிட்டுச் சென்றார். டெல்லி விமான நிலையத்தை அவர் வந்தடைந்த போதே, தமிழ்நாடு முதலமைச்சரும் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். அதேபோல், பீகாரில் இருந்து டெல்லி புறப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரும், இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும் இன்று விமானத்தில் பயணித்தனர்.
மேலும் படிக்க | மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!
இருப்பினும், சந்திரபாபு நாயுடு மட்டுமின்றி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கூட தங்களுக்கு ஆதரவு தேசிய ஜனநாய கூட்டணிக்குதான் என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் செய்தி தொடர்பாளர் கே.சி.தியா கூறுகையில்,"இந்தியா கூட்டணிக்கு திரும்பச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை" என்றார். இதன்மூலம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும் என தெரிகிறது. பிரதமர் மோடியும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருக்கிறது.
பிரதமர் மோடி ராஜினாமா
அதை தொடர்ந்து, இன்று டெல்லியில் 17ஆவது மக்களவை அமைச்சரவையின் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆட்சியை கலைக்கும் தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கு சென்ற பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து 17ஆவது மக்களவை அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை அளித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபந்து பிரதமர்
இதையடுத்து, பிரதமர் மோடி அளித்த ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஏற்றார். மேலும், அமைச்சரவையை கலைக்கும் பரிந்துரையையும் குடியரசு தலைவர் ஏற்றார் எனலாம். தொடர்ந்து, ஆட்சியமைக்க பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்த பிரதமர் பதவியேற்கும் வரை காபந்து பிரதமராக செயல்பட்ட மோடியிடம் திரௌபதி முர்மு கேட்டுள்ளார்.
எப்போது பிரதமர் பதவியேற்பு விழா?
இதையடுத்து நரேந்திர மோடி வரும் ஜூன் 8ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக நாளை மறுநாள் (ஜூன் 7) டெல்லி நாடாளுமன்ற கூட்ட அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ