மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!

நாட்டில் மீண்டும் பிரதமர் மோடியின் கீழ் ஆட்சி அமையப் போகிறது என்றாலும், முன்பைப் போல் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னால் சில முக்கிய சவால்கள் நிச்சயம் இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 5, 2024, 11:17 AM IST
  • அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பிரதமருக்கு முன்னால் இருக்கும் 5 பெரிய சவால்கள்.
  • தனிப் பெரும்பான்மை இல்லாததால், கூட்டணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  • இரு தலைவர்களும் ஏற்கனவே பீகார் மற்றும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி வந்தனர்.
மத்தியில் கூட்டணி ஆட்சி... பிரதமர் மோடியின் முன் உள்ள ‘முக்கிய’ சவால்கள்..!!

நாட்டில் மீண்டும் பிரதமர் மோடியின் கீழ் ஆட்சி அமையப் போகிறது என்றாலும், முன்பைப் போல் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னால் சில முக்கிய சவால்கள் நிச்சயம் இருக்கும்.  மொத்தம் உள்ள 543 இடங்களில் NDA கூட்டணி 293 இடங்களையும், இந்திய கூட்டணி 232 இடங்களையும் பெற்றுள்ளது. பாஜக தனித்து 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அதே நேரத்தில் 300 ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வெற்றி சிறிது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.  பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லை. இத்தகைய சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் உதவியுடன் ஆட்சி அமைக்கப்படும் போது அதற்கான சவால்களும் அதிகரிக்கும். முக்கிய முடிவெடுக்கும் போது, ​​பா.ஜ.க அதன் கூட்டணி கட்சிகளையும் அதன் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பிரதமருக்கு முன்னால் இருக்கும் 5 பெரிய சவால்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

பிரதமர் மோடியின் முன் உள்ள முதல் சவால்

பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) தனிப் பெரும்பான்மை இல்லாததால், இப்போது கூட்டணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கூட்டணியை உறுதியாக வைத்திருப்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் சவாலாக இருக்கும். இப்போது சட்டங்கள் மற்றும் மசோதாக்களில் நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்களை கேட்டாக வேண்டிய நிலை உள்ளது.

பிரதமர் மோடிக்கு முன் உள்ள இரண்டாவது சவால்

பாஜகவின் கூட்டணியில் இருக்கும் நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரும் தங்கள் முன்னுரிமைப் பிரச்சினைகளில் ஒருபோதும் ஒற்றுமையாக இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே. நிதீஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரும் தலைவலியை கொடுப்பதில் திறமையானவர்கள். இப்போது, ​​பட்ஜெட்டில் இருந்து மாநிலம் வரை, மோடி அரசிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர்பார்ப்பார்கள். இப்போது சிறப்பு மாநில அந்தஸ்து பிரச்சினை பெரியதாக ஆகலாம். இரு தலைவர்களும் ஏற்கனவே பீகார் மற்றும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி வந்தனர்.

பிரதமர் மோடிக்கு முன் உள்ள மூன்றாவது சவால்

பாஜகவின் கூட்டணிக் கட்சிகளின் சித்தாந்தம் பாஜக கட்சியில் இருந்து வேறுபட்டது. பல விஷயங்களில் கூட்டணி கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே மிகப்பெரிய சிந்தனை வேறுபாடு உள்ளது. பொது சிவில் சட்டத்தில் பிரதமர் மோடி அரசாங்கம் மெதுவாக நகர்வதற்கு இதுவே காரணம். இந்த தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு, பாஜக இப்போது கட்சி அமைப்பில் மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். வரும் நாட்களில், கட்சியில் மீண்டும் மாற்றங்களை துவங்கும் மனநிலையில் இருக்கலாம்.

மேலும் படிக்க | Lok Sabha Election Result: ஹாட்டிரிக் அடித்த NDA...மோடி அலையை தடுத்த INDIA கூட்டணி..!!

பிரதமர் மோடிக்கு முன் உள்ள நான்காவது சவால்

பிரதமர் மோடி தனது வெற்றி உரையில் தனது அரசு பெரிய முடிவுகளை எடுக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த 5 ஆண்டுகள் மோடி மந்திரத்தின் தாக்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான நேரமாக இருக்கும். இதற்காக பிரதமர் மோடி அரசாங்கம் தனது கொள்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

பிரதமர் மோடிக்கு முன் ஐந்தாவது சவால்

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது மூன்று மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட பாஜகவுக்கு அழுத்தம் ஏற்படும். தில்லியைத் தவிர, மற்ற இரு மாநிலங்களின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அக்கட்சியின் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளன. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அழிந்துவிட்டதாகத் தோன்றினாலும், சட்டமன்றத் தேர்தல்களில் அது எப்போதும் வலுவாக மீண்டு வந்திருக்கிறது என்பதும் உண்மைதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜக இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News