Cabinet Expansion: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் யாருக்கு வாய்ப்பு?
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, கடந்த சில வாரங்களாக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்ட பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படாத நிலையில், தற்போது விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, கடந்த சில வாரங்களாக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், இது குறித்த விபரஙக்ள் எதுவும் வெளியாக வில்லை.
மேலும்,உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்களை அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | National Doctors Day: "டாக்டர்கள் கடவுளின் மற்றொரு வடிவம்" - பிரதமர் நரேந்திர மோடி
ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்பில், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு (Jyotiraditya Scindia) பதவி ஏதும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து அவர் விலகியதன் காரணமாக மத்திய பிரதேசத்தை பிஜேபி (BJP) மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாமில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பின்னர் அசாம் முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா பதவி ஏற்க வழி விட்ட சர்பானந்தா சோனோவாலுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இருப்பினும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சரவையில் சேருமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மத்திய அமைச்சரவையில் 81 உறுப்பினர்கள் இருக்கலாம் என்ற நிலையில் தற்போது 53 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் 28 பேருக்கு கூடுதலாக அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ALSO READ | உலகின் பழமையான தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR