உலகத்தலைவர்களில் நம்பர்-1 இடத்தை பிடித்த பிரதமர் மோடி: Morning Consult

அமெரிக்கா, இங்கிலாந்து. பிரான்ஸ், ஜெர்மன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களை தோற்கடித்து மோடி உலகத் தலைவர்களில் நம்பர்1 இடத்தில் மோடி இருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.

Written by - ZEE Bureau | Last Updated : Jun 18, 2021, 08:09 AM IST
  • வளர்ந்த நாடுகளின் தலைவர்களை தோற்கடித்து மோடி உலக த்தலைவர்களில் நம்பர்1 இடத்தில் மோடி இருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமை
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 53% பெற்று ஆறாவது இடத்தில் உள்ளார்.
  • ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா 29% பெற்றுள்ளார்.
உலகத்தலைவர்களில் நம்பர்-1 இடத்தை பிடித்த பிரதமர் மோடி: Morning Consult

உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இண்டெலிஜென்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட்  நேற்று அதாவது 17-06-2021 அன்று வெளியிட்டுள்ள தரவுகளின் படி உலகத் தலைவர்களில் திறமை வாய்ந்தவராக மோடி 66% ஆதரவுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று (Corona Pandemic) காலத்தில் அவரது செல்வாக்கு சிறிது சரிந்ததாக கூறப்படும் நிலையிலும், உலக தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. அவரை அடுத்து இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி (Mario Draghi) 65 சதவீதம் ஆதரவு பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரூஸ் மேனுவல் லோபஸ் ஆப்ரேடர்  (Andres Manuel Lopez Obrador) உள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 54% உடன் நான்காவது இடத்தையும், அதன் பின்னர் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 53%, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் (Joe Biden) 53%, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48%, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 44%, தெற்கு கொரிய அதிபர் மூன் ஜே-இன் 37%, ஸ்பெயின்  நாட்டுப் பெட்ரோ சான்செஸ் 36%, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 35%, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 35%, ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா 29%  என்ற அளவில் பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்கா, இங்கிலாந்து. பிரான்ஸ், ஜெர்மன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களை தோற்கடித்து மோடி உலகத் தலைவர்களில் நம்பர்1 இடத்தில் மோடி இருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.

ALSO READ | தப்பியோடிய மெகுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்
 

More Stories

Trending News