`மன் கி பாத்` வானொலி நிகழ்ச்சியில் இன்று மோடி உரை
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
புதுடெல்லி: மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் வானொலி உரை மன் கி பாத் நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து உரையாற்ற உள்ளார்.
இந்த உரை நிகழ்த்தும் 29-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். 5 மாநில தேர்தல் நடந்து வரும் நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. இதனையடுத்து தேர்தல் கமிஷனிடம் மன் கி பாத் நிகழ்ச்சிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கடந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் பொதுத் தேர்வுகள் எழுதும் பள்ளி மாணவர்கள் குறித்து மோடி உரையாற்றினார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் நாட்டு மக்களிடம் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.