பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்...! 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.  2015 ஆம் ஆண்டு அமிர்தசரஸிலும், 2016 ஆம் ஆண்டு இமாச்சலில் உள்ள இந்தோ-திபெத் எல்லையிலும், 2017 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள BSF படை வீரர்களுடனும் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹர்சிலில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடிக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். டுவிட்டரில் நேதன்யாகூ வெளியிட்ட வாழ்த்துச்செய்திக்கு பதிலளித்த பிரதமர் மோடி,'' ஒவ்வொரு ஆண்டும் எல்லைப்பகுதிக்கு சென்று, வீரர்களுக்கு ஆச்சர்யம் அளிப்பேன். நிகழாண்டிலும், தீரம் மிக்க நமது வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட உள்ளேன். வீரர்களுடன் நேரத்தை செலவிடுவது மிகவும் சிறப்பானது. கொண்டாட்டத்துக்கு பிறகு, அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிடுகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 


பிரதமர் மோடி, இன்று இமயமலையில் உள்ள கேதார்நாத் கோயிலில் வழிபாடு மேற்கொள்கிறார். அதோடு, அங்கு நடந்து வரும் மறுகட்டமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட உள்ளார்.