நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவஸ்” அதாவது, பராக்கிரம தினமாக,  கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறிவித்தது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தநாளில் இந்த மாமனிதர், தேசத்திற்கு ஈடு இணையற்ற பங்களிப்பை இந்திய மக்கள் அன்புடன் நினைவில் கொள்கிறார்கள். நேதாஜியின் 125 வது பிறந்த தினத்தை தேசிய மற்றும் சரவதேச நிலையில், 2021 ஜனவரி முதல் சிறப்பான வகையில் கொண்டாட மத்திய அரசு (Central Government) முடிவு செய்துள்ளது" என அமைச்சகம் கூறியது.


இந்நிலையில் பிரதமர் மோடி (PM Narendra Modi), பராக்கிரம் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது தேசிய நூலக மைதானத்தில் நேதாஜி தொடர்பான கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைப்பார். 


மேலும், நேதாஜி சுபஷ் சந்திர போஸ் (Nethaji Subash Chandra Bose) அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரை பிரதமர் மோடி கவுரவிப்பார். நேதாஜியின் ராணுவத்தில் இருந்த சுமார் 26,000 தியாகிகளின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் கட்டுவது குறித்தும் கலாச்சார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.


நேதாஜியின் 125-வது பிறந்தநாளை  இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய  பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேதாஜியின் பிறந்த நாள் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகளில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 200 கலைஞர்கள் போஸின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் 400 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் ஓவியம் வரைவார்கள் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் கூறினார்.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamtha Banerjee), நேதாஜியின் 125வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி கொல்கத்தாவில் 'பாதயாத்திரை' நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.


பிரதமர் மோடி அங்கிருந்து அசாமிற்கும் பயணம் மேற்கொள்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அசாமில் உள்ள சிவசாகரில் ஒரு லட்சம் நிலம் பட்டாக்களையும் அவர் பயனாளிகளுக்கு வழங்க உள்ளர்.


ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடியின் இரு மாநிலங்களுக்கான பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


ALSO READ | நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR