புது டெல்லி: ஜம்மு-காஷ்மீர் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அபிவிருத்தி செய்தியை பரப்புவதற்காக நரேந்திர மோடி அரசு பிரச்சார திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், மத்திய அரசின் 38 அமைச்சர்கள் யூனியன் பிரதேசத்திற்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு மத்திய அரசு திட்டங்களை தெரிவிப்பார்கள். நகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் வளர்ச்சி செய்தியை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) வேண்டுகோள் விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமண்யம் கூறுகையில், "ஜம்முவில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் பின்னர், 38 மத்திய அமைச்சர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் ஜம்மு-காஷ்மீரின் 60 இடங்களுக்குச் சென்று மக்களிடம் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்கள் எனத்தெரிவித்தனர். 


புதுடில்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ​​உள்ளூர் மக்களுடன் உரையாடலின் போது வளர்ச்சிச் செய்தியை பரப்புமாறு பிரதமர் அமைச்சர்களிடம் கேட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பல்வேறு மத்திய திட்டங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இது அடிமட்ட மக்களுக்கு பயனளிக்கும்.


கிராமங்களுக்கும் செல்லுங்கள்: மோடி
பிரதமர் மோடி அமைச்சர்களிடம், நகர்ப்புறங்களுக்கு மட்டுமல்ல கிராம மக்களைச் சந்தித்து ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல்களைத் தர வேண்டும் என்று கூறினார். ஜனவரி 18 முதல் 24 வரை 38 மத்திய அமைச்சர்கள் இரு பிரிவுகளாக பார்வையிடுவார்கள். அதை உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜனவரி 19 ஆம் தேதி ரியாசி மாவட்டத்தின் கத்ரா மற்றும் பந்தல் பகுதிக்கு செல்ல உள்ளார். அதே நாளில், அமைச்சரவையில் அவரது சகா, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்ரீநகருக்கு செல்ல உள்ளார். உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஜனவரி 22 ஆம் தேதி காண்டர்பால் மற்றும் ஜனவரி 23ம் தேதி மணிகம் ஆகிய இடங்களுக்கும், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஜனவரி 24 ஆம் தேதி பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோருக்கு செல்கிறார்கள். வி.கே.சிங் ஜனவரி 20 ஆம் தேதி உதம்பூரில் உள்ள திக்ரிக்கு செல்ல உள்ளார்.


அதே நேரத்தில், கிரண் ரிஜிஜு ஜனவரி 21 அன்று ஜம்முவில் உள்ள சுசேத்கர் செல்கிறார். இதேபோல், மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் தோடா மாவட்டத்திலும், ஸ்ரீபாத் நாயக் ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.ஐ.சி. இவர்களைத் தவிர, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், கிரிராஜ் சிங், பிரஹ்லாத் ஜோஷி, ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், ஜீந்திரா சிங் ஆகியோர் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களுக்கு வருகை தரும் அமைச்சர்களின் பட்டியலில் உள்ளனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.