ஒரேநாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி இந்தியா சாதனை
இந்தியாவில், மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மிக முக்கிய பங்கு வகிப்பது தடுப்பூசி. இந்தியாவில், மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான கோவேக்ஸின் (Coavaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி (Sputnik V) தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது. உலகில் தடுப்பூசி கண்பிடித்த மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை குறையத்தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது அலை பரவுவதை தடுக்க, தடுப்பூசி மிகவும் அவசியம். தடுப்பூசி போடுவதன் மூலம் மட்டுமே மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முடியும் என்று பரவலாக மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்மையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்ததோடு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் எனவும் அறிவித்தார். அந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதல் நாள் அன்றே, 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ALSO READ | COVID-19: பள்ளிகள் திறப்பதைப் பற்றி மத்திய அரசு கூறுவது என்ன..!!
ஒரே நாளில் 80 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு சாதனை புரிந்தததற்கு மகிழ்ச்சி வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்து, முன்கள் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தரவுகளின் படி, 30 லட்சத்திற்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று தடுப்பூசி போடப்பட்டவர்களின் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில், மூன்றாவது அலை ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR