பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், இன்று முதற்கட்ட வாக்குபதிவு துவங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன. 


நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தல் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது.


இந்த தேர்தலில் முதற்கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குபதிவு காலை 8 மணி முதல் துவங்கியது, மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து செல்கின்றனர்.


இந்த முதற்கட்ட வாக்குபதிவு துவங்கியதை குறித்து பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்: குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று வாக்களிக்கும் அனைவரும் தவறாமல் தங்களது கடமையை செய்து வாக்குப்பதிவில் வரலாறு படைக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் முன்வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும்பதிவிட்டுள்ளார். 



182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று (டிசம்பர் 9-ம்) மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெற உள்ளது.