பிரதமர் மோடியின் புதிய Mercedes-Maybach காரின் சிறப்பு அம்சங்கள்..!!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ முதல் ரேஞ்ச் ரோவர் மற்றும் லேண்ட் குரூசர் வரை, SPG வாங்கிய புதிய தலைமுறை கவச வாகனங்களில் பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பதைக் காண முடிந்தது.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் VVIP என்னும் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக உள்ளார். குடியரசுத் தலைவர் உட்பட நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் SPG பாதுகாப்பின் ஒரு பகுதியாக விரிவான பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை பாதுகாப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும், வாகனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில். SPG (சிறப்பு பாதுகாப்பு குழு) இந்திய பிரதமருக்கான வாகனத்தை தேர்வு செய்வதற்கான சூழ்நிலை மற்றும் அச்சுறுத்தல் அளவை கவனமாக மதிப்பீடு செய்கிறது.
பல ஆண்டுகளாக, பிரதமரின் பாதுகாப்புக் வாகங்களில் பல வாகனங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம், அதில் மிக முக்கியமானது BMW 7-சீரிஸ் ஆகும். இருப்பினும், மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப, SPG குழுவுக்கு நவீன மற்றும் பாதுகாப்பான கார்கள் தேவைப்பட்டன, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ முதல் ரேஞ்ச் ரோவர் மற்றும் லேண்ட் குரூசர் வரை, SPG வாங்கிய புதிய தலைமுறை கவச வாகனங்களில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) பயணிப்பதைக் காண முடிந்தது.
ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை
அந்த வகையில், சமீபத்தில், பிரதமர் மோடி Mercedes-Maybach S650 காரும் அவரது வாகனங்களில் இணைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Maybach 650, இந்தியாவின் மிக விலையுயர்ந்த கவச வாகனம் ஆகும், இதன் விலை ரூ.12 கோடி என கூறப்படுகிறது. தோட்டாக்கள் மற்றும் குண்டுவெடிப்புகளை தாங்கும் VR10 மற்றும் ERV 2010 மதிப்பீட்டைப் பெறுகிறது
VR10 என்பது உலகெங்கிலும் உள்ள எந்தவொரு சிவிலியன் வாகனத்திலும் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பாகும், மேலும் கார் தோட்டாக்கள், இரண்டு மீட்டர் தூரத்தில் இருந்து 15kg TNT வெடி குண்டு தாக்குதலையும் தாங்கும் வண்ணம் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அதன், சக்கரங்கள் பஞ்சர் ப்ரூஃப் ஆக உள்ளது.
Mercedes-Maybach 650 Guard கார் 6.0 லிட்டர் V12 ட்வின் டர்போசார்ஜ்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக 523 bhp பவரையும், 830 Nm டார் திறனையும் உருவாக்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய Mercedes-Maybach S600 Pullman Guard காரில் பயணம் செய்கிறார். இது VR9-நிலை பாதுகாப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR