பிரதமர் மோடி கடந்த 20 ஆண்டுகளாக நாள்தோறும் 18 மணி நேரம் பணியாற்றி வருகிறார். ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை என அமித்ஷா புகழாரம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், ஒடிஸா மாநிலம், மொரதா, சுகிந்தா ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்; 261 மக்களவைத் தொகுதிகளில் ஏற்கெனவே நான் பிரசாரம் செய்துவிட்டேன். அப்போது கிழக்கில் இருந்து மேற்கு, வடக்கில் இருந்து தெற்கு வரையிலும் மக்கள், மோடி மோடி என்று கோஷம் எழுப்புவதை நான் கேட்டேன். இதிலிருந்து மோடியை மீண்டும் பிரதமராக்க நாட்டு மக்கள் தீர்மானம் பூண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.


பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவது, ஒடிஸாவை ஆளும் பிஜு ஜனதா தளத்தின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. ஒடிஸா மக்கள், மாநிலத்திலும், மத்தியிலும் வேகமான வளர்ச்சிக்காக பாஜக அரசமைவதற்கு வாக்களிக்க வேண்டும். ஒடிஸாவை ஆளும் ஊழல்மயமான, திறனற்ற பிஜு ஜனதா தளம் அரசு தூக்கியெறிப்பட்டால்தான், மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியப்படும். நிதி நிறுவன மோசடி மற்றும் சுரங்க ஊழலில் சிக்கியிருப்போரை நவீன் பட்நாயக் பாதுகாக்கிறார். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அவர்கள் அனைவரும் 90 நாள்களில் சிறையில் அடைக்கப்படுவர்.


பிரதமர் மோடி கடந்த 20 ஆண்டுகளாக நாள்தோறும் 18 மணி நேரம் பணியாற்றி வருகிறார். ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. இந்த நாட்டுக்காக தன்னையே அவர் அர்ப்பணித்துக் கொண்டு பணிபுரிகிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, 2 மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை எடுத்துவிட்டு மர்மமான இடத்துக்கு சென்று விடுகிறார். அவர் செல்லும் இடம் குறித்து, அவரது தாயார், காங்கிரஸ் கட்சியினருக்கு கூட தெரியாது என்றார் அமித் ஷா.