இ-சிகரெட்டிற்கு அரசு தடை விதித்தது ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்..!

பெண்களின் சாதனைகளை #BharatKiLakshmi என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல்!!
பெண்களின் சாதனைகளை #BharatKiLakshmi என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல்!!
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின் 48-வது மாதமாக இன்று நடைபெற்ற
மன் கீ பாத் நிகழ்ச்சில், ரேடியோ வழியாக மக்கள் மத்தியில், உரையாற்றிய பிரதமர் மோடி பெண் குழந்தைகளை கொண்டாட “பாரத் கி லட்சுமி” (#BharatKiLakshmi) என்ற புதிய முயற்சியை தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மன் கீ பாத்தில் பேசியதாவது...!
நவராத்திரி பண்டிகையையொட்டி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தங்களுடைய படிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், மாணவர்களின் அனுபவங்கள் அடிப்படையில் “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தின் அடுத்த பதிப்பை எழுத முற்படுவேன் என்றும் கூறினார். நமது பண்டிகையின் போது, நமது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிரும் போது, இரு மடங்காக அதிகரிக்கும். நமது வீட்டில் அதிகம் உள்ள பொருட்களை, தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் வந்து துணிகள், இனிப்புகளை சேகரித்து தேவைப்படுபவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். அவர்கள், எந்த புகழுக்கும், பெருமைக்காகவும் அல்லாமல் செயல்படுகின்றனர். இந்த பண்டிகை காலத்தில் அனைவரும் இணைந்து இருளை நீக்குவோம். ஏழைகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்து, நமது மகிழ்ச்சியை அதிகரிப்போம்.
மேலும், பெண் குழந்தைகளை கொண்டாட “பாரத் கி லட்சுமி” என்ற புதிய முயற்சியை தொடங்க வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெண்களின் சாதனைகளை #BharatKiLakshmi என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் என்றும், பெண்கள் திறமை, வலிமையை நாரி சக்தி என்ற பெயரில் கொண்டாடுவோம் என அவர் கூறியுள்ளார். தேர்வு அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும். தேர்வு குறித்த தங்களது அனுபவங்களை மாணவர்கள் எனக்கு எழுதலாம். இதன் அடிப்படையில், எக்சாம் வாரியர் புத்தகத்தின் அடுத்த பதிப்பை எழுதுவேன். இந்த புத்தகம் பல மாணவர்களுக்கு உதவியது.இந்த நாட்டின் பிரதமரின் கடுமையான உழைப்பை பொது மக்கள் பார்த்துள்ளனர். அதனை பற்றி விவாதித்துள்ளீர்கள். நானும் உங்களை போன்று சாதாரண மனிதன் தான். உங்களை பாதிப்பது என்னையும் பாதிக்கிறது. உங்களில் இருந்து தான் நான் வந்துள்ளேன். நமது முன்னோர்களின் அறிவுத்திறன் அனைவராலும் பாராட்டக்கூடியது என்றார்.
மேலும், புகையிலை பொருட்களுக்கு அடிமையாவது உடல்ந லத்திற்கு தீங்கானது. இதில் இருந்து மீள்வது கடினம். இதனை, பயன்படுத்துவதை தவிர்த்து உடல் நலத்தை பேண வேண்டும். புகையிலை பயன்படுத்துவதால், ரத்த அழுத்தம், சர்க்கரை, புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், இ - சிகரெட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தாது என பலர் நம்புகின்றனர். ஆனால், சுவாச பிரச்னை, இதய கோளாறு, நரம்பியல் கோளாறு, மரபியல் ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பொது மக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், மத்திய அரசு தடை செய்துள்ளது. அனைவரும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும். பிட் இந்தியா என்பது உடற்பயிற்சி கூடத்திற்கு மட்டும் செல்வது கிடையாது. பிட் மற்றும் ஆரோக்கிய இந்தியாவை உருவாக்க அனைவரும் உழைப்போம்.
மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்போம். பிளாஸ்டிக்கை ஒழிக்க 130 கோடி மக்களும் உறுதி ஏற்றுள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.