லடாக்கில் 20 துணிச்சலான இந்திய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர் என்று பிரதமர் தேசத்திடம் கூற வேண்டும் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது நாட்டின் 20 ராணுவ வீரர்களின் தியாகம் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்தது என்படி என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை அதிகாலை வரை இந்தியா சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறுகையில்.... "நமது 20 ராணுவ வீரர்களின் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்த துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் மையப்பகுதியிலிருந்து எனது அஞ்சலி செலுத்துகிறேன். இந்த வலியை எதிர்கொள்ள தங்கள் குடும்பங்களுக்கு பலம் அளிக்குமாறு சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.



எல்லை பிரச்னையில் வீரர்கள் உயிரிழந்ததால் நாட்டு மக்கள் முழுவதும் கோபத்தில் இருக்கிறார்கள். சீனா நமது நிலத்தை எவ்வாறு ஆக்கிரமித்தது. நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து எப்படி, லடாக்கில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் மோடி வெளிப்படையாக கூற வேண்டும். நமது ராணுவ வீரர்கள் / அதிகாரிகளை இன்னும் காணவில்லையா? நமது வீரர்கள் / அதிகாரிகள் எத்தனை பேர் படுகாயமடைந்துள்ளனர்? சீனா எந்த பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது? இதைச் சமாளிக்க மத்திய அரசாங்கத்தின் கொள்கை என்ன? இந்த நெருக்கடியான நேரத்தில் நமது இராணுவம், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்" எனவும் அவர் கூறினார்.