நாட்டில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அடுத்து இந்த ஆண்டு எந்தொரு ஹோலி மிலன் நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான அறிவிப்பினை அவர் தனது ட்விட்டர் பதிவின் வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.


இந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிடுகையில்., "COVID-19 நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக வெகுஜனக் கூட்டங்களை தவிர்க்க உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இந்தாண்டு எந்த ஒரு ஹோலி மிலன் நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்." என குறிப்பிட்டுள்ளார்.



இந்தியாவில் இதுவரை ஆறு நேர்மறையான கொரோனா வைரஸ் (COVID-19) வழக்குகள் பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. COVID-19-ன் சமீபத்திய வழக்குகள் புது தில்லி, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் இருந்து பதிவாகியுள்ளன, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு இத்தாலிய நாட்டவர் நோய்த்தொற்றுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


COVID-19 என பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 நபர்களுக்கு அதிக வைரஸ் சுமை இருப்பதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிலையான இடத்தில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சந்தேகிப்பபடும் நபர்களின் ரத்த மாதிரினை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், ஜெய்ப்பூரில் உள்ள இத்தாலிய நாட்டினருடன் தொடர்பு கொண்ட 21 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் மூன்று இந்தியர்கள் (பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உட்பட) 24 பேர் சோதனைக்காக ITBP வசதிக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முன்னதாக கடந்த மாதம், கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது, பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் தற்போது குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு அமைச்சரவை செயலாளர் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் சுகாதார செயலாளர்களுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், நிலைமையை சமாளிக்க மத்திய அரசு முழு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, 25 டெல்லி மருத்துவமனைகள் - 19 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆறு தனியார் மருத்துவமனைகள் உட்பட - அவசர காலங்களில் நோயாளிகளின் வருகையை கையாள வசதியாக அமைக்கப்பட்டுள்ளன.


மேலும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட N95 முகமூடிகளை விநியோகிக்க டெல்லி அரசு ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.