உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ‘பிரவசி பாரதிய திவஸ்’ (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூட்டத்தில் பேசிய அவர், ஆளும் பாஜக அரசால் நாட்டு மக்களின் வங்கி கணக்கில், பல்வேறு திட்டங்களின் கீழ் இதுவரை ₹5,80,000 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


பல்வேறு அம்சங்களில் இந்தியா இன்று உலகிற்கு தலைமையேற்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட மோடி, சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு மூலம் ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே ஆற்றல் பகிர்மானம் என்னும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பேசினார்.



தொடர்ந்து பேசிய அவர்., வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவருமே இந்தியாவின் தூதர்கள்தான். நமது ஆற்றல் மற்றும் திறமைகளின் அடையாளமாக அவர்கள் திகழ்கின்றனர் என தெரிவித்தார்.


மொரீஷியஸ், போர்ச்சுகல், அயர்லாந்து போன்ற நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தலைமை பதவிகளில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர்., நாட்டு மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் பாஜக அரசு போராடி வருவதாக பேசினார்.


அரசு அறிவிக்கும் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று அடைவதில்லை என குறிப்பிட்டு பேசிய அவர்., தற்போது நடந்து வரும் பாஜக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் மக்களிடன் முழுமையாக சென்று அடைகிறது எனவும் தெரிவித்தார். 


தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளிகளுக்கான நலத்திட்டங்கள் நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகின்றது என தெரிவித்த அவர்., கடந்த நான்கரை ஆண்டு பாஜக ஆட்சிகாலத்தில்  பல்வேறு திட்டங்களின் கீழ் ₹5,80,000 ரூபாய் மக்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.