பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை,  மன்கீ பாத் என்னும் வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய மன் கீ பாத், அதாவது மனதின் குரல் எனப்படும் வானொலி  நிகழ்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியின், 68வது நிகழ்ச்சியாகும். இன்றைய நிகழ்ச்சியில், உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவித்து, வோக்கல் ஃபார் லோக்கல் என்னும் தற்சார்பு இந்தியாவை  உருவாக்கும் முயற்சியில், உள்ளுர் தாயரிப்புகளை மக்கள் அதிக அளவில் வாங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றார்.  


குழந்தைகளுக்கு பொம்மைகள் தயாரிப்பு துறையில், பல விதமான பொம்மைகளை தயாரிக்க பல ஸ்டாரட் அப் கம்பெனிகள் முன்வர வேண்டும் என்றார். 


குழந்தைகளின் வளர்ச்சிக்கு பொம்மைகள் மிகவும் முக்கியம் என்றும், இந்தியா ஒரு பொம்மை உற்பத்தி மையமாக மாற வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் கூறினார்.  ரவீந்திரநாத் தாகூர் கூட பொம்மைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார்" என்று பிரதமர் மோடி கூறினார். இதை மனதில் வைத்துக் கொண்டு பிரதமர் ஸ்டாரப் நிறுவனங்கள் பொம்மைகள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


கணிணி விளையாட்டுகளும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளது. ஆனால், அவற்றில் மேற்கத்திய தாக்கம் அதிகம் காணப்படுகிறது.  இந்தியாவை மையப்படுத்தும் விளையாட்டுகள் தேவை என அவர் கூறினார்.


பொம்மை உற்பத்தித் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வழிகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரத்திற்கு முன்பு மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார்.


இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுடன் இணைந்த பொம்மைகளை அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளிலும் பயன்படுத்த வேண்டும் என்றும்,  குழந்தைகள் வளரும் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்ப கற்பிக்க பொம்மைகள் கருவிகளாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.


தனது உரையின் போது, பிரதமர் மொபைல் செயலிகள் பற்றியும் பேசினார். நாட்டில் மைக்ரோ பிளாக்கிங்கிற்கான 'கூ' (Koo) மற்றும் 'சிங்காரி' (Chingari) போன்றவை.


"சுய சார்பு இந்தியா தொடர்பிலான, செயலிகளை கண்பிடிப்பதற்கான  சவாலின் கீழ், கண்டு பிடிக்கப்பட்ட ”குட்டுகீகிட்ஸ்” (KutukiKids)  என்ற செயலி மூலம் குழந்தைகள் கணிதம், விஞ்ஞானத்தின் பல அம்சங்களை பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்" என்று பிரதமர் மோடி கூறினார்.


மேலும் படிக்க | Unlock 4.0: மெட்ரோ சேவை, பள்ளி, பொது நிகழ்ச்சிகள், குறித்த வழிகாட்டுதல்கள் என்ன..!!!


"இதேபோல், சிங்காரி என்ற செயலி இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது. ஆஸ்க்சர்கர் (AskSarkar) என்ற செயலி உள்ளது. இதில் நீங்கள் ஒரு சாட்போட் மூலம்  எந்தவொரு அரசாங்க திட்டம் தொடர்பான சரியான தகவலைப் பெறலாம். அதுவும், எழுத்து வடிவம், ஆடியோ வடிவம் மற்றும் வீடியோ வடிவத்தை பெறலாம். 


மேலும் படிக்க | Unlock 4 ஏன் முந்தைய அன்லாக் கட்டங்களை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது..!!