2024-க்குள் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியனாக உயர்த்துவோம்: பிரதமர் மோடி
இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் என்று பிரதமர் மோடி கிழக்கு பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார்.
ரஷ்யாவிற்கு பயணம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று (வியாழக்கிழமை) கிழக்கு பொருளாதார மன்றத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் தனது உரையில், 130 கோடி இந்தியர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறினார். இதற்காக அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். "அனைவருடன் சேர்ந்து அனைவருக்கனா வளர்ச்சி" என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் 2024 க்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியனாக மாற்றும் முயற்சியில் எங்கள் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனக் கூறினார்.
நேற்று நடந்த பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலனா சந்திப்பில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சாலை மற்றும் கடல் போக்குவரத்து ஒப்பந்தம், இராணுவ ஆயுதங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை என மொத்தம் 25 முக்கியமான ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.