கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி மற்றும் ராகுல்!
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் நாளை தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளாதக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் நாளை தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளாதக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பாரத்திய ஜனதாக கட்சியின் செய்திதொடர்பாளர் ஷனத்ராம் இதுகுறித்து தெரிவிக்கையில் நாளை பிரதமர் மோடி கர்நாடகாவின் மங்களூரு மற்றும் பெங்களூருவில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.
அதேவேலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோலார், சித்ரா துர்கா மற்றும் கே.ஆர்.நகர் ஆகிய மூன்று பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரக்காஷ் ரத்தோட் தெரிவித்துள்ளார். இதில் கோலார் மற்றும் சித்ராதுர்கா காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் ஆகும், மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜனதா தலம் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகின்றார். எனவே கே.ஆர் நகரில் JD(S) வேட்பாளர் நிகில் குமாரசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
28 மக்களவை தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மத்திய மற்றும் தெற்கு கர்நாடகாவை சேர்ந்த 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதியும், வடக்கு பகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படுகிறது. பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் மே 23-ஆம் ஆறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக-வை தொகுதிகள் பொருத்தவரையில் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் மாண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்ரீஷின் மனைவி சுமலதா அம்ரீஷ் அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்து வருகிறது.
காங்கிரஸ் - ஜனதா தல கூட்டணியில் தொகுதி பங்கீடு 21:7 என்ற விகிதாச்சாரத்தில் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாஜக மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி 3 முறை பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதே வேலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு முறை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.