வங்க தேசம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது நாட்டின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு (PM Narendra Modi) விடுத்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று காலை தில்லியில் இருந்து வங்கதேசத்துக்கு புறப்பட்டு சென்றார்.
கொரோனா வைரஸ் ( Corona Virus) பரவல் தொடங்கியதிலிருந்து எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பயணிப்பதற்காக வாங்கப்பட்ட போயிங் 777 விமானம் மூலம் அங்கு சென்றார்.
வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை (PM Narendra Modi) வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வங்க தேசத்தின் சுதந்திர தின பொன்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், வங்கதேசத்தின் தந்தை எனப்படும் ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், ஷேக் முஜிபூர் ரகுமானின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
ALSO READ | இஸ்லாமியர்கள் இணைந்தால் 4 புதிய பாகிஸ்தான் உருவாகும்: TMC தலைவர் ஷேக் ஆலம்
தனது பயணத்தின் போது, வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதையும் சந்தித்து பேசுவார். இந்தியா மற்றும் வங்க தேசம் இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
வங்க தேசத்தில் உள்ள ஜசோளீஸ்வரி காளி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய உள்ள பிரதமர் மோடி ஓரக்கண்டி என்ற இடத்தில் மடுவா சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார் என கூறப்படுகிறது.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைமையின் கீழ் வங்கதேசம் வியப்பூட்டும் அளவில் அடைந்துள்ள பொருளாதார மற்றும் வளர்ச்சியை பாராட்டுத் தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக என பயணம் இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், வங்க தேசத்தின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ந்து ஆதரவை அளிக்கும் வகையில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டாக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, விமான நிலையத்திலிருந்து சாவர் நகரில் இருக்கும் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்.
2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.
ALSO READ | பங்களாதேஷில் இந்து கிராமம் மீது கொலைவெறி தாக்குதல்; தப்பிக்க ஊரை விட்டு ஓடிய மக்கள்