#FactCheck: பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடயே உரையாற்றுகிறாரா?

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க, 2020 மார்ச் 24, அன்று, பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2021, 04:50 PM IST
  • பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
  • மேற்கு வங்காளத்தில் உள்ள கதியில் மூன்று பொதுக் கூட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்.
  • உள்துறை அமைச்சகம் புதிய COVID-19 வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
#FactCheck: பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு மக்களிடயே உரையாற்றுகிறாரா? title=

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க, 2020 மார்ச் 24, அன்று, பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான ஒரு வருடம் கழித்து, இணையத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு தேசத்தை உரையாற்றுவார் என்பது தான்.

பிரதமர் நரேந்திர மோடி  (PM Narendra Modi) இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும் இது போலியான செய்தி .  பிரதமர் இன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றவில்லை.

இன்று இரவு பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவது குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், அவர் மேற்கு வங்காளத்தில் உள்ள கதியில் மூன்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகிறார். அஸ்ஸாமில் உள்ள பிஹ்பூர் மற்றும் சிபாஜர், ஆகிய இடங்களிலும் உரையாற்றுகிறார். தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெறும்.

இன்றிரவு பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்ற செய்தி தவறானதாகும். செவ்வாயன்று, உள்துறை அமைச்சகம் புதிய COVID-19 வழிகாட்டுதல்களை வெளியிட்டது. வழிகாட்டுதல்களில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், நிலைமையை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில், மாவட்ட / துணை மாவட்டம் மற்றும் நகரம் / வார்டு மட்டத்தில், COVID-19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளூர் நிலைகளில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் கூறியது.

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எந்த தடையும் இருக்காது. அத்தகைய போக்குவரத்திற்கு  தனி அனுமதி / ஒப்புதல் எதுவும் தேவையில்லை என வழிகாட்டுதல்களும் தெரிவிக்கின்றன

ALSO READ | TN Election 2021: தமிழக தேர்தல் பிரச்சார களத்தில், பிரதமர் மோடி, அமித்ஷா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News