ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மும்பைக்கு வருகை புரிந்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 3-ஆம் ஆண்டிற்கான இரண்டு நாள் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இந்த இரண்டு நாள் கூட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


இந்நிலையில், இரண்டாம் நாளன இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மும்பை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு  விமான நிலையத்தில் உர்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


இதையடுத்து, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ஆண்டு கூட்டத்தில் அவர் பேசும் போது, 


இந்தியா பொருளாதார முன்னேற்ற வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிதி ஒருங்கிணைப்பு பாதையில் அரசு உறுதியாக உள்ளது. அரசாங்க கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 


மேலும், NDIA & AIIB ஆகிய இருவரும் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஒருங்கிணைத்து மற்றும் நிலையானதாக மாற்றுவதற்கு உறுதியுடன் உள்ளனர். 


முதலீட்டாளர்கள் வளர்ச்சி மற்றும் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றதிற்கு இந்தியா உறுதுணையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.