கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.21,000 கோடியில் 200க்கும் அதிகமான திட்டங்களுக்கு அனுமதி பிரதமர் மோடி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 


இந்நிலையில் பிரதமர் மோடியும் மக்கள் ஆதரவை பெற இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அதன் முதற்கட்டமாக மோடி முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்தார். மேலும், உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கர் சென்றடைந்த பிரதமர் மோடி, ரூ.23 ஆயிரம் கோடி செலவில் அங்கு அமைக்கப்பட உள்ள புரவஞ்சல் விரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். 


இதையடுத்து பேசிய அவர்; 50 வருட காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் 4 ஆண்டுகளில் செய்துள்ளோம். மக்களை இணைக்கும் போக்குவரத்து முக்கியமானது. தேசிய நெடுஞ்சாலை பணிகள் இரண்டு மடங்காக நடந்துள்ளது. வீடு இல்லாதோருக்கு இது வரை 1 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 



இன்னும் விமான போக்குவரத்தை அதிகரிக்க முன்வந்துள்ளோம். விவசாயிகள், ஏழைகள், தலித் மக்கள், கிராம முன்னேற்றமே எங்களின் இலக்கு. எதிர்கட்சியினர் ஒட்டுகளையே குறியாக இருக்கின்றனர். மக்கள் பணியாற்ற தயாராக இல்லை. ஓட்டுக்காக எதிரிகளாக இருந்தவர்கள் சேருகிறார்கள்.



அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக, பின்தங்கிய வகுப்புகளின் வளர்ச்சியை தடுக்க எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. தலித்துகள், ஏழைகளும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அதிகாரம் பெற்றிருந்தால், அவர்களுடைய 'வியாபாரம்' முடகப்பட்டு இருந்தது.



காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான கட்சி என அதன் தலைவர் தெரிவித்ததாக செய்தித்தாள்களில் படித்தேன், காங்கிரஸ் ஆண் முஸ்லிம்களுக்கானதா ? அல்லது பெண் முஸ்லிம்களுக்கும் சேர்த்துதானா ? என கூறினார்!